வடக்கில் பலவீனப்படுத்தப்பட்டுள்ள மீனவ அமைப்புக்கள்?



வடமாகாணத்தில் பலம் மிக்கவையாக இருந்த மீனவ அமைப்புக்கள் கட்சி அரசியலால் பிளவுண்டு பலவீனமடைந்துள்ளன.

இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த கோரி வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்த நிலையில் அது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே டக்ளஸ் மீன்பிடி அமைச்சராகி மீனவ அமைப்புக்களை சிதைத்துள்ளார்.இன்னொருபுறம் தீவிர தமிழ் தேசியம் பேசும் கத்தோலிக்க மதகுருமார் கடற்கரைகளை தென்னிலங்கைக்கு வாடகைக்கு விடுவதும் அம்பலமாகியிருந்தது.

இதன் பின்னணியில் டக்ளஸ் இருப்பது ஏற்கனவே வெளிவந்திருந்தது.

இதனிடையே யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பித்து யாழ் இந்திய துணைத்தூதுவர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற சுமார் 30பேர் இந்திய தூதுவரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர். இந்திய அரசிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரிய படுத்துவதாகவும் எனினும் வேண்டுமென்று இந்திய மீனவர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை எனவும் ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பில் பலதடவை கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் மீண்டும் இந்திய மீனவர்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் தெரிவித்திருந்தார்.


No comments