நாகர்கோவிலும் ஆட்களை காணோம்?


யாழ்ப்பாணம் - வடமராட்சி, நாகர்கோவில் பாடசாலை மீதான அரச படைகளின் விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அமைதியாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னராக பலரும் நாடாளுமன்றம் சென்றுள்ள நிலையில்  சொல்லிக்கொள்ளத்தக்கதாக எவரும் எட்டிக்கூட பார்த்திராத நிலையில் நினைவேந்தல் நடைபெற்றிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வு பாதுகாப்பு படைகள் மற்றும் வலய கல்வி திணைக்களத்தால் இன்று; கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாகர்கோவிலுக்குள் நுழைவோர் சோதனையிடப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நினைவேந்தலுக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். 


No comments