பிரித்தானியாவில் திலீபனின் 8ஆம் நாள் நினைவுநாள்

காந்தி தேசம் என்று பெருமை பேசும் இந்தியதேசத்தின் சதியால் வித்தாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 8ம் நாள்

வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் Langley தமிழ் பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நவீன கோட்சேக்களால் எறியப்படும் கற்களும் அவதூறுகளும் உன்னை  நெருங்க முடியாது.

அன்னியமாகி நிற்கும் மக்கள் திரள் கவசம், அவற்றைத் தடுத்து நிற்கும் என்பதற்கமைவாக

திலீபன் அண்ணாவுக்காக அமைக்கப்பட்ட நினைவுப் பந்தலில் அவர் உண்ணாவிரதமிருந்த 12 நாட்களும் அவருக்கான ஈகைச்சுடர் எரிந்தாலும் உலகத் தமிழர் இல்லங்களிலும் அவருக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மக்கள் வணக்க நிகழ்வில் பங்கெடுத்துவருகின்றார்கள்.

திலீபன் அண்ணாவின் திருவுருவத்திற்க்கான மலர் மாலையினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் அணிவித்ததை தொடர்ந்து தீபவணக்கத்தினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் குகன் அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்த்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

இவ் வணக்க நிகழ்வில் திலீபன் அண்ணாவின் நினைவுகள்சுமந்த  எழுச்சி உரைகளை சிறுவர்கள் அரங்கேற்றியிருந்தார்கள்.

No comments