கொரோனா! பிரித்தானியாவில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்


இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரித்தானியப் பிரதமர் போறிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இப்புதிய கட்டுப்பாடுகள் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது. 

அனைவரும் முக கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். தவறுவோருக்கு தண்டணைப் பணமாக இரு மடங்காக அதாவது 200 பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தகங்கள் (பார்கள்), உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் இன்று வியாழக்கிழமை முதல் இரவு 10 மணியுடன் மூடப்படவேண்டும்.

திருமண நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

விளையாட்டு மைதானம், விளையாட்டுக் கழகங்கள் திறப்பது இரத்து செய்யப்படுகிறது.

நிறுவனங்களின் ஊழியர்கள் முடிந்தால் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள். அதேநேரம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திறக்கலாம்.

குறித்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாதங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்தால் காலப்பகுதி நீடிக்கப்படும் என பொறிஸ் ஜோன்சன் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் மது அருந்தகங்கள் (பார்கள்), உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் இரவு 10 மணியுடன் மூடப்படவேண்டும். மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வட அயர்லாந்தில் ஏற்கனவே மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

No comments