நல்லூரிலிருந்து வெடுக்குநாறிக்கு நடைபயணி?


வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம்,இனங்களுக்கிடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளரவும், உலகமெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் விலகவும் இறையருள் வேண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் வரை தரிசன யாத்திரை இடம்பெறவுள்ளது.


இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஒழுங்கமைப்பில் எதிர்வரும்- 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகும் குறித்த தரிசன யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சென்று 11 பானைகளில் பொங்கல் பொங்கி, பூசை- நாமப் பஜனைகளில் ஈடுபட்டு நேர்த்திகளை நிறைவு செய்து திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments