விடுதலையின் வித்துக்கள்!


கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முகமாலை முன்னரங்கப் பகுதில் கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் மீட்பு பணியின் போது, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது வித்துடல் எச்சங்களும், ஆயுத தளபாடங்களும் மீட்கப்பட்டது!


இன்றைய மீட்பு பணியின் போது த.வி.பு ஞா-188,த.வி.பு ஞா-308 சோதியா படையணியினுடையது என நம்பப்படும் இலக்கத் தகடு, தலைவர் வே.பிரபாகரனது ஒளிப்படம் என்பனும் மீட்கப்பட்டுள்ளது!


அதே பகுதியில் தற்போதும் வித்துடல் எச்சங்கள்,முகமாலை பகுதியில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு பளை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது இன்றைய தினம் அகழ்வு பணி இடம் பெற்றிருந்த நிலையில் அகழ்வின்போது விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் ஆன மண்டையோடுகள் எலும்புகள் போன்றன மீட்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராளிகள் அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் இலக்கத் தகடுகள் இரண்டு என்பன மீட்கப்பட்டது.


No comments