வெடுக்குநாறி:தடைபோட நீதிமன்று மறுப்பு!



நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று நடாத்தவும் மன்று அனுமதித்துள்ளது. திருவிழாக்காலங்களில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதுவித இடையூறோ அச்சுறுத்தலோ செய்யக்கூடாது எனவும் நெடுங்கேணி பொலிசாருக்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.


குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் சட்டத்தரணிகளான காண்டீபன், தயாபரன், திருவருள், குருஸ், யூஜின் ஆனந்தராஜா உள்ளிட்ட பதினாறு சட்டத்தரணிகள் முன்னிலையாகினார்கள். 


நெடுங்கேணி எல்லைக்கிராமத்தை கபளீகரம் செய்யும் நடவடிக்கையாக வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments