தடை அதை உடை: திலீபன்!

தடைகள் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வை குழப்பியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் தயாராகிவருகின்றனர்.

நினைவேந்தல் நாளை செவ்வாய்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனுடைய நினைவுதினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. இதையடுத்து, இன்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் என கருதும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத்தூபி மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக பகுதிகளில் அதிகளவான இலங்கை காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இலங்கை காவல்துறையால்; தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதவான் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் பிரகாரம் யாழ் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட 16 பேர் நினைவேந்தலை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வவுனியாவிலிருந்து புறப்பட இருந்த நடைபயணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments