தூ! தூபியிலும் அரசியல்?

தமது அற்ப அரசியலுக்காக தியாகங்களை விற்பது தமிழ் அரசியல்வாதிகளிடையே சாதாரணமாகியுள்ளது.யாழ்ப்பாணம் ஆவரங்கால்

பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு முன்னணியை சேர்ந்த மணிவண்ணன் அணி முன்வந்திருந்த நிலையில், தூண்டி விடப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தமது பிரதேசத்துக்கு இந்தத் தூபி தேவையில்லை என்றும், அவர்கள் வியாக்கியானம் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பில் வெறும் பத்திற்கும் குறைவானவர்களே ஈடுபட்டிருந்தனர்.

திலீபனின் நினைவுத் தூபி அமைப்பதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஆவரங்காலின் ஒட்டுமொத்த மக்களும் குரல்கொடுக்கவில்லை என்றும், இது ஒரு சிலரின் ஏற்பாடே என மக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

ஒருபுறம் குறித்த தூபியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்பவர்கள் தொடர்பில், அப்பகுதியில் உள்ள சிலரிடம் சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தகைய போராட்டகாரர்கள் தமது முகத்தை மறைத்திருந்ததுடன் அவர்கள் குறித்த தரப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்கனவே நல்லூரிலுள்ள நினைவாலயத்திலும் கட்சிகள் குடுமிப்பிடியில் ஈடுபட்டுள்ளமை தெரிந்ததே.

No comments