ஆட்கொலையில் பயிற்றப்பட்ட தென்னிலங்கை யானைகள்?


 வன்னியில் யானை தாக்கி யுவதியொருத்தி உயிரிழந்துள்ள நிலையில் யானைகள் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

பின்னவல சரணாலயத்தில் பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை கொண்டு வந்து தமிழ் பிரதேசங்களை அண்டிய காடுகளில் இறக்கி விடப்படுவதனால், அப்பாவி தமிழ் மக்களும், அவர்களின் அன்றாட வாழ்வியலும், பயிர்பச்சைகளும் அழிக்கப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்கள் வாழும் கிராமங்களில் கொண்டுவந்து விடப்படும் , மக்களுடன் நன்கு பரீட்சயமான வளர்ப்பு யானைகள் காடுக்களுக்குள் சென்று, அங்கு வாழும் காட்டு யானைகளுடன் சேர்ந்து, அவற்றையும் மக்கள் வாழ்விடங்களை நோக்கி கூட்டம்கூட்டமாக, அழைத்துவந்து மக்களின் அன்றாட வாழ்வியலை சிதைக்கும் கைங்கரியத்தை நிறைவேற்றிவருகின்றன.

அரசும், அதன் பாதுகாப்பு கட்டமைப்பும் தமிழ் மக்களை திட்டமிட்டவகையில் அமைந்த இன அழிப்பை ஏற்படுத்துவதன்பொருட்டும், அவர்தம் குடிப்பரம்பலைத் தடுப்பதன் நோக்கோடும், அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும், இவ்வாறான கீழ்த்தரமான நாசகார வேலைகளை செய்துவருவது நிரூபணம் ஆகின்றது.

No comments