புலம்பெயர் தேசத்திலிருந்து புறப்பட்டது வியாபார கும்பல்?

கொழும்பில் யார்  ஆட்சிக்கதிரையேறினாலும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் பெயரில் ஒரு சில தரப்புக்கள் கடைவிரித்துவிடுவது வழமை.

அவ்வகையில் புதிதாக களமிறங்கிய கும்பலை அலரி மாளிகைக்கு அழைத்து மகிந்த நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று மஹிந்த ராஜபக்ச, அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

வடக்கு - கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு - கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தாராம்.

இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தாராம்.

இச்சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளாராம்.

No comments