அரசடி சந்தியில் பாரதியார் நினைவேந்தல்?இந்திய தூதரக ஏற்பாட்டில் இன்றைய தினம் நல்லூர் அரசடி சந்தியில் நடைபெற்ற பாரதியார் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் இந்நாள் பிரபலங்கள் பலரும் பங்கெடுத்திருந்தனர்.

நாளை 12ம் திகதியே நினைவேந்தல் என்ற போதும் சனி விடுமுறை என்பதால் நேரகாலத்துடன் இன்று நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கூட்டமைப்பின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கெடுத்திருந்தார்.

அதேவேளை முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தியும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments