கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக்

குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதனிடையே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

'அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு மாவட்டக் குழுத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.'

'மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் அல்லாத இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, அவர்களது முழு நேரத்தையும் அதற்காக செலவிடுவதற்காக ஆகும்' என்றும் கோத்தபாய ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.


No comments