முன்னேற்றம்:கேரளா கஞ்சாவுடன் பெண் கைது!!2கிலோகிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்


இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா பாலமோட்டை பகுதியிலிருந்து ஓமந்தை நோக்கி இலகு ரக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபெண்ணை கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.


இதன் போது அவரது மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.


அவரை கைதுசெய்த பொலிசார், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.


குறித்த சம்பவத்தில் வவுனியா நெளுக்குளம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நாளைஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments