நாடாளுமன்றத்திற்கு அண்மித்து சடலம்?


நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிக்கட பொலிஸாரினால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோக்காந்தர பகுதியைச் சேர்ந்த  74 வயதுடைய நபர்  ஒருவர் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை உயிரிழந்த   நபர் கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

No comments