மிலிந்த அமெரிக்க உளவாளியே?



ரணிலின் முக்கிய சகபாடியான மிலிந்த மொரகொட அமெரிக்க உளவாளியென தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக மிலிந்த மொறகொட செயற்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு அவரை நியமிக்க வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஏற்கனவே ரணில்;அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் கருணாவை புலிகளிலிருந்து பிரித்தமை தொடர்பிலும் மிலிந்த மீதே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. 


2002ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையிலிருந்து அமெரிக்கத் தூதுவர்கள் நால்வரால் அனுப்பட்ட 150 கேபில் மூலமான தகவல்களிலும் மிலிந்த மொறகொடவின் பெயர் இருப்பதாக தெரியந்துள்ளதெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலம் வெளியான தகவல்களில் மிலிந்த மொறகொட பற்றிய தகவல்கள் எவையும் தெரியவந்திருக்கவில்லை என்பதோடு, கேபில் வலையமைப்பு மூலமான தகவல்களை வாசிக்கும்போது மிலிந்த மொறகொட அமரிக்காவின் உளவாளியாக செயற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.


அத்தோடு, அவர் அரசாங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை குறை மதிப்பீடு செய்து தனியார் துறைக்கு விற்பனை செய்தார் என்று இரு வழக்குத் தீர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் குறிப்பிடுகிறது.


மேற்படி வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மிலிந்த மொறகொடவுக்கு எதிராக எந்த வேளையிலும் வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமென நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும், அதனால் அவர் எவ்வேளையிலும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


மேற்படி நபரை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய இயலுமை கொண்ட நாட்டுக்கு உயர்ஸ்தானிகராக நியமிப்பது பாரதூரமானதெவும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments