ரணிலின் கதிரைக்கான கடைசி நாள்?


ஜக்கிய தேசியக்கட்சியில் ரணில் தலைமைக்கு ஆணி அடிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

சஜித் தரப்பின் வெளியேற்றம்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாமல் போனமையென பெரும் பின்னடைவின் மத்தியில் ரணிலின் கதிரை பறிபோகின்றது.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (14) இடம்பெறவுள்ளது.


பிற்பகல் 3 மணியளவில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், மற்றுமொரு செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது


இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர்  தெரிவு செய்வதற்கு, பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், தற்போது வெற்றிடமாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.No comments