ஊடுருவிய சிங்களவர்கள் யார்?இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவியர்கள் போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதன் போது குறித்த நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பாதாள உலக கும்பலை சேர்ந்த நபரொருவர் தமிழகத்தில் உயிரிழந்த விவகாரம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments