கைதான மாணவர்கள் மத்திய கல்லூரி?


கிளிநொச்சியில் முன்னணி பாடசாலை மாணவர்கள் ஹெரோயினுடன் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

கைதான மாணவர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் கணிதம், உயிரியல் விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் 4 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியான போதும் காவல்துறை அதனை மூடி மறைத்தே வந்திருந்தது.


No comments