புலம்பல் ஓய்ந்தபாடாக இல்லை?


சத்தியப்பிரமாண நிகழ்வின் அன்றே கொழுத்திப்போட்ட சி.வி.விக்கினேஸ்வரன் உரை தெற்கில் ஓய்ந்தபாடாக இல்லை.

அதன் தொடர்ச்சியாக பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

'இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை. ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது.

குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு இனவாத கோணத்தில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.' என்றார்.


No comments