மீண்டும் விவசாய திணைக்களத்தில் சர்ச்சை??

வட மாகாண அரச திணைக்களங்களில் பாலியல் லஞ்சம் முடக்கி வைக்கப்பட்டாலும் அங்கொன்று இங்கொன்றாக விடயங்கள் அம்பலமாகி வருகின்றது.

வட மாகாண விவசாய திணைக்களத்தில் பாலியல் லஞ்சத்தால் சில உத்தியோகத்தர்கள் பழிவாங்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளதை செயற்பாட்டாளர்கள் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

உயரதிகாரியிடம் தொடர்புகொள்ளும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் ஆசை வார்த்தைகளை உயரதிகாரிக்கு கூறுவதுடன் தனக்கு எதிரான உத்தியோகத்தர்களை பணி இடமாற்றம் செய்யுமாறும் தெரிவிக்கின்றார். 

இதேவேளை தனக்கு தேவையான வேலையையும் குறித்த அதிகாரியிடம் கோருவதுடன் அதனை செய்து தர பாலியல் லஞ்சம் வழங்கவும் தயாரான நிலையில் வெளிவந்த அந்த குரல் பதிவில் உள்ளடங்கியுள்ளது. 

இவ்வாறான நிலை வட மாகாணத்தில் காணப்படுகின்றதா என்பது கேள்வியாக காணப்பட்ட போதிலும் குறித்த குரல் பதிவு அவ்வாறான நிலை உள்ளதை  உறுதி செய்கின்றது.


No comments