கதிரையேற தயாரென்கிறார் சித்தர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக பொருத்தமான பதவியை

நிச்சயம் ஏற்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா ஆகிய இரண்டு பதவிகளையும்  தமிழரசுக் கட்சியினரே வைத்திருந்ததாகவும் இப்போது ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் கொடுப்பதில் எந்தவித தவறும் இல்லை என த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை  நல்ல விடயமாகவே தான்  பார்ப்பதாகவும் த.சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய போது சிலர் தங்களிடம் கூட்டமைப்பு என்ன செய்தது என கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் இனிமேல் அனைவரிடமும் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் எனவும் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பி;ன பேச்சாளர் மற்றும் கொரடா பதவிகளை தாரை வார்ப்பதை தவிர்க்க தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற குழுக்களது கூட்டத்தினை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments