கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள்!

 


எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடமும் பரவக்கூடிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிரான புதிய தடுப்பு மருந்தின் சோதனைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. புதிய தடுப்பு மருந்து, DIOS-CoVax2, மனித கொரோனா வைரஸ்களின் தொடர்புடைய மற்றும் வௌவல் உட்பட பல விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் அனைத்து கொரோனா வைரஸ்களின் மரபணு வரிசைகளின் வங்கிகளைப் பயன்படுத்துகிறது. எனவே, இந்த ஒரு மருந்து பலவற்றையும் அழிக்கும். இது ஒரு ஜெட்கன்மூலம் வழியின்றி தோலில் போடப்படுவதாகும்.

“எங்கள் அணுகுமுறை SARS-CoV-2 [கோவிட் -19] வைரஸ் கட்டமைப்பின் 3D கணினி மாடலிங் அடங்கும். இது வைரஸைப் பற்றிய தகவல்களையும் அதன் தொடர்புடைய SARS, MERS மற்றும் பிற விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவும், எதிர்காலத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை எதிர்த்து போராடுகிறோம், ” என்று ஆய்வகத் தலைவர் பேராசிரியர் ஜொனாதன் ஹீனி கூறினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைரல் ஜூனோடிக்ஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் ஸ்பின்-அவுட் நிறுவனமான DIOSynVax இன் நிறுவனர் ஆவார்.

பேராசிரியர் ஹெய்னி, ஒரு வைரஸ் மனித செல்களைப் பற்றிக் கொள்ளவும், தனது மரபணுவை மனித செல்களுக்குள் செலுத்தவும் பயன்படுத்தும் புரதத்தின் கட்டமைப்பைக் குறிவைத்து தாக்கி வைரஸ்களை முற்றிலுமாக இந்த துப்பு மருந்து பின்னியில் ஒரு உக்தியாக பயன்படுத்தினர் என்றார். மேலும், அதே நேரத்தில் இந்த நோயெதிர்ப்பு செயல்பாடுகள் செயலிழக்கச் செய்யும் ஆன்டிபாடிகள் உருவாக்கம், வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றும் T-செல்கள் ஆகியவையும் அடங்கும். கொரோனா வைரஸின் மேற்பரப்பில் தவறான பகுதிகளை அங்கீகரிப்பதன் மூலம் தூண்டப்படக்கூடிய பாதகமான உச்சப்பட்ட நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தவிர்க்க இந்த “லேசர்-க்கு மட்டும் குறிப்பிடப்பட்ட” கணினி உருவாக்கிய அணுகுமுறை உதவுகிறது.

தாங்கள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து உறைய வைத்து தூலாக்கக் கூடிய தன்மை கொண்டது எனவே இதை சாதாரண வெப்ப நிலையிலும் சேமிக்க முடியும் என்று கூறுகின்றனர்.  குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் முக்கியமானது. மேலும் இது பார்மாஜெட் டிராபிஸ் இன்ட்ராடெர்மல் ஊசி வடிவில், செலுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஐஎச்ஆர் சவுத்தாம்ப்டன் மருத்துவ ஆராய்ச்சி வசதியின் இயக்குனர் பேராசிரியர் சவுல் ஃபாஸ்ட் கூறும்போது, “மருத்துவ சோதனையானது எந்தவொரு ஊசிகளும் இல்லாத ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி நிலையான டி.என்.ஏ தடுப்பு மருந்து, தொழில்நுட்பத்துடன் சேர்ந்து மக்களுக்கு தோல் வழியாக தடுப்பு மருந்தை செலுத்தி சோதிக்கிறோம் என்பது மிகவும் உற்சாகமானது. உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களுக்கு எதிர்கால தடுப்பூசியை வழங்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்”

விஞ்ஞானிகள் போதுமான தரவுகளைச் சேகரிக்க முடிந்தால், ஆஸ்ட்ராஜெனிகாவுடன் உருவாக்கப்படும் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பு மருந்து குறித்த சோதனை முடிவுகளை இந்த ஆண்டு கட்டுப்பாட்டாளர்கள் முன் வைக்கலாம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து, பொதுவாக அறியப்பட்டபடி, நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் போது முதல் மனித சோதனையில் காட்டிய ஆரம்பகால வாக்குறுதியை நிறைவேற்றியது. கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் பந்தயத்தில் முன்னணியில் உள்ளது.

No comments