உலகத்தமிழர் ஆராய்ச்சி மகாநாட்டு நினைவிடத்தில் செஞ்சோலை நினைவேந்தல்


14.08.2020 இன்று செஞ்சோலை மாணவர்களின் படுகொலையின் 14 ம் ஆண்டு  நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரல் யாழ் உலகத்தமிழர் ஆராய்ச்சி மகாநாட்டு உயிர் கொடை உத்தமர் நினைவாலயத்தில் செஞ்சோலையில் உயிர் நீத்த மாணவர்களுடைய 14 வது ஆண்டுநினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள்,மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் இவ்நிகழ்வில் கலந்து கொண்டனர்.No comments