பாலியல் குற்றச்சாட்டில் விஜயகலா வேட்பாளர்!


முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான விஜயலா மகேஸ்வரனின் நெருங்கிய உதவியாளர் சர்வா என்றழைக்கப்படும் சர்வானந்தன் மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் விஜயகலா மகேஸ்வரனின் கீழ் குறித்த பிரமுகரும் தேர்தலில் குதித்துள்ளார்.

பிரபல வாகன விற்பனை வர்த்தகரான அவரால் சாவகச்சேரியில் நிர்வகிக்கப்படும் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கோரி குறித்த யுவதி மற்றும் அவரது தாயார்,சகோதரி ஆகியோர் விற்பனை நிலையம் முன்பதாக போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவம் அறிந்து திரண்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க அரசியல் தரப்புக்களும் ஆதரவு வழங்கின.

சம்பவத்தை இலங்கை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட யுவதியின் வாக்குமூலத்தை இன்றிரவு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே தேர்தல் அறிவிப்பின் பின்னராக பிரச்சாரங்கள் முனைப்படைந்துள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சந்தேககங்களை எழுப்பியுள்ளது. 

ஏற்கனவே சட்டவிரோக மணல் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை குறித்த வேட்பாளர் எதிர்கொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.  


No comments