2 ஆம் தவணை விடுமுறை அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா அச்சத்தால் இடைநிறுத்தப்பட்ட தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி  திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, ஏனயை தரங்களுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணை கல்வி ஒக்டோபர் மாதம்  09 ஆம் திகதி மூடப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments