காக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்!

மூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும் அந்த செய்திக்கும் தொடர்பில்லை, ஆசிரிய பீடம் என்ன செய்துகொண்டு இருக்கிறது என பார்த்துக்கொண்டிருந்தால், நான் வேற வேலை பார்க்க முடியாது. ஆசிரியர் பீடத்துடன் இணைந்து ஓடுபவர்கள் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனைவிடுத்து , பத்திரிகையை காட்டி , விளக்கம் சொன்னால் பத்திரிகையாளர்கள் என்ன செய்வார்கள் ? என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குனநரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை தொடர்பிலேயே ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments