உதயனிற்கு சுமந்திரனின் இலவச விளம்பரம்?


'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை ஆதரவாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று காலை நல்லூரிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி கூட்டத்தில் பங்கெடுக்க வருகை தந்திருந்தவர்களிற்கே சுமந்திரன் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவனின் சொந்த பத்திரிகையான உதயன் பத்திரிகையினை வழங்கியிருந்தார்.

சுமந்திரனால் இலவசமாக வழங்கப்பட்ட அப்பத்திரிகையில் யாழ்.ஊடக அமையத்தில் மூத்த போராளி காக்காவின் சுமந்திரனை நிராகரிக்க கோரும் பேட்டி வெளியாகியிருந்தது.

No comments