கொள்கையே முக்கியம்: சசிகலா ரவிராஜ்!


வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அல்லது அதற்கு மேலாக கொள்கைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்.


சில அன்பர்கள் மற்றும் சில ஆதரவாளர்கள், இவரோடு ஒத்துழைத்தால் தான் வெற்றி உறுதி, அவரோடு ஒத்துழைத்தால் தான் வெற்றி உறுதி என கூறுவது என் செவிகளில் கேட்கிறது.வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அல்லது அதற்கு மேலாக கொள்கைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

நாம், எமது மக்களின் தேவைகளையும் வலிகளையும் உணர்ந்தவர்களாக, பக்கசார்பின்றி சகலரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.
தேவையின்றி முரண்படுவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தென்மராட்சி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கும் கூட்டங்களுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்படும்போது இயலுமையை பொறுத்து அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு  மதிப்பளிப்பதே பண்பாடாகும். இது எல்லா சக வேட்பாளர்களுக்கும் பொருந்தும்!எனது பாதை தனித்துவமானது, அது மாமனிதரின் பாதை என வலியுறுத்தியுள்ளார்.

No comments