டக்ளஸ் வாகனம் விபத்து?


கொடிகாமம் மிருசுவில் பகுதியில்  டக்களஸ் தேவானந்தாவின் பதுகாப்புப் பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று (02) காலை 6 மணியளவில் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பில் கலந்துகொண்டுவிட்டு,  டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினர் வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனம் பெரிய அளவில் சேதத்துக்கு உள்ளான போதும், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments