ஈபிடிபிக்காக கூட்டமைப்பு வக்காலத்து:மணிவண்ணன்.


ஈபிடிபியின் ஊழல்களை தான் தோண்டியெடுக்க முற்பட்ட வேளையிலேயே கூட்டமைப்பு ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து தனது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியை முடக்கி வைத்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன்.

ஏதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாலமென கணிக்கப்படும் மணிவண்ணனிற்கு எதிராக அனைத்து பக்கங்களிலும் சேறுபூசல்கள் தொடர்கின்றது.

அவரது தேர்தல் சுவரொட்டிகளை வீதிப்பலகைகளில் திட்டமிட்டு கூட்டமைப்பு தரப்பு ஒட்டும் சிசிரிவி காணொலி அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் நாவந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மணிவண்ணன் உரையாற்றுகையில் யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னைய  ஈ.பி.டி.பி யின் ஆட்சியில் நடைபெற்ற   ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் விசாரிக்க முற்பட்ட வேளை  குறிப்பாக புல்லுக்குளம் கட்டிடம் சம்மந்தமாக ஆராய முற்பட்ட போதே அதில் இருந்து ஈ.பி.டி.பி யை காப்பாற்றுவதற்காக என்னை முடக்க முற்பட்டனர்.

அதிலும் முதல்வர்; தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு  உதவியதற்கு நன்றிக் கடனாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது தனது உறுப்புரிமையை தடை செய்து வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார்.

No comments