நீதிமன்ற படியேறி வாக்கு அறுவடை?

தேர்தல் அறிவிப்பின் பின்னராக நீதிமன்ற படியேறி வாக்கு அறுவடை செய்யும் உத்தியில் எம்.ஏ.சுமந்திரன் மும்முரமாக உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வடமராட்சி கடல்பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்து அத்துமீறித் தொழில் செய்வோருக்கு எதிராக வடமராட்சி மீனவர் சங்க சமாசங்கள் சட்டத்தரணி தி.சந்திரசேகரன் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளார்.

இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வடமராட்சி கடல்பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்து அத்துமீறித் தொழில் செய்வோருக்கு எதிராக கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இரு வாரங்களிற்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இனி அவ்வாறு நீடிக்கத் தேவையில்லை என பருத்தித்துறை பொலிசார் தெரிவித்த கூற்றின் அடிப்படையில் வழக்கு கைவிடப்பட்டு இருந்தது.

இருந்தபோதும் இதே வகையான அத்துமீறிய தொழில் மீண்டும் இடம்பெறுவதனால் சமாசப் பிரதிநிதிகள் ஓர் சட்டத்தரணி ஊடக நகர்த்தல் பத்தரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அவ்வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments