இனஅழிப்பு கடற்படை:கைவரிசை காட்ட தொடங்கியது!


சிங்கள கடற்படை முல்லைத்தீவிலுள்ள புதுமாத்தளனில் நேற்றிரவு தமிழ் மீனவ குடும்பங்களை கொடூரமாக தாக்கயுள்ளது.


நேற்றிரவு வியாழக்கிழமை அதிகாலையில் கடற்படை நடத்திய தாக்குதலில் தந்தை, அவரது மகன் மற்றும் மூன்று பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை புதுமாத்தளான் மீன்வள சங்கத் தலைவர் மகேந்திரன் அலெக்ஸ் அல்லது சுமனின் வீட்டிற்குள் நுழைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அவரது தந்தை, 55 வயதான மகாலிங்கம் மகேந்திரன் மற்றும் 28 வயதான மகேந்திரன் நிக்சன், தம்பிக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களை சகட்டுமேனிக்கு தாக்கியதில் மூன்று பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

கடற்படை புதன்கிழமை இரவு 11:30 மணியளவில் அந்த பகுதிக்கு வந்து அருகிலுள்ள துறைமுகத்தில் நங்கூரமிட்ட ஒரு மீன்பிடி படகை எடுத்து சென்றுள்ளனர்.

அதேவேளை மின்சார ஜெனரேட்டருடன் வீட்டிலிருந்து 317,000 ரூபா பணத்தையும் கடற்படை பறித்தெடுத்து சென்றுள்ளது.

பின்னர் கடற்படையினர் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்ட படகில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

No comments