சுமந்திரன் இருக்கும் வரை இந்தியா தலையிடாது: சிவசேனை

வவுனியா நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் மருத்துவர் சத்தியலிங்கத்தின் கோரிக்கையை இந்தியா ஏற்குமா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.

கிழக்கில் தொல்லியல் செயலணி தடுக்க இந்தியா முன்வர வேண்டும் என மருத்துவர் சத்தியலிங்கம் கேட்கிறார். 

பல மாதங்களுக்கு முன்பு சென்னைக்கும் தில்லிக்கும் சென்றனர். தங்கிடுதத்தி ஒருவரின் இணைப்புடன் சென்றனர்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் குகதாசனும் சத்தியலிங்கமும் சென்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்தும் கனடாவில் இருந்தும் வந்திருந்தனர்.

சென்னையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களையும் தில்லியில் வெளிவிவகார அமைச்சின் இணை அமைச்சரையும் சந்தித்து மீண்டனர்.

சென்னையிலும் தில்லியிலும் இவர்களுக்கு சொன்ன செய்தி. உங்களோடு சுமந்திரனை வைத்துக்கொண்டு இங்கு வராதீர்கள். சுமந்திரனை வைத்துக்கொண்டே சத்தியலிங்கம் கேட்கிறார். இந்தியா தலையிடுமாறு கேட்கிறார்.

30 ஆயிரம் மாணவ ஊழியர்களை இந்தியாவில் மதமாற்றப் பணியில் அமர்த்திக் கொண்டு பணிபுரியும் சாவித்திரி சுமந்திரனைத் தடுக்கமுடியாதா? சாவித்திரி சுமந்திரனிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியாதா? என இந்தியா மருத்துவர் சத்தியலிங்கத்தையும் குகதாசனையும் கேட்டால் இவர்களால் என்ன செய்ய முடியும்?

இந்தியாவிற்கு துன்பம் விளைவித்து கொண்டே இந்தியாவின் உதவியை கேட்கிறார் மருத்துவர் சத்தியலிங்கம். 

அவருக்கு தெளிவாகச் சொல்கிறேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகச் சுமந்திரன் இருக்கும் வரை இந்தியா, ஈழத் தமிழர் தரப்புக்காக எதையும் செய்யாது. நான் சொல்லவில்லை இந்தியாவே உங்களிடம் சொன்னதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். வீட்டைச் சுத்தம் செய்யுங்கள் .விருந்தினரை அழையுங்கள் என மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

No comments