எதிர்காலம் அச்சமாக இருக்கின்றது?


மீண்டும் அதிகரித்து வரும் ஊடக அடக்குமுறைகள் அச்சமான சூழலொன்றை ஊடக பரப்பில் ஏற்படுத்தியிருப்பதாக யாழ்.ஊடக அமையம் கவலை தெரிவித்துள்ளது.


பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெயில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் யாழ்.ஊடக அமைய நிர்வாக குழுவுடன் பேச்சு நடத்தியபோதே அதனை ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கைதுகள்,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான தடை உள்ளிட்டவை தொடர்பில் சந்திப்பில் ஊடக அமையத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே குழுவினர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை இன்று சந்தித்து பேசினர்.

இச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாவும் கலந்துரையாடப்பட்டதாக சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments