புலிநீக்க அரசியலிற்கு உடன்படோம்: சரா!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும். மரத்தில் குருவிச்சை இருந்தால் குருவிச்சையை வெட்டி விடுங்கள்; மரத்தையே வெட்டி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் ஊடக மையத்தில் இருந்துதான் மூத்த போராளி பசீர்காக்கா போட்டியளித்தார். இதனை அனைத்து ஊடகங்களும் அறியும். ஊடக சுதந்திரத்தில் கருத்து சுதந்திரத்திற்குட்பட்டுச் செயற்பட்டால் யாருக்கும் பயமின்றிச் செயற்படலாம். 36 வருட எனது பத்திரிகை வரலாற்றில் ஆசிரியர் பீடம் என்னுடன் செய்திகள் கலந்துரையாடியதில்லை. நானும் அதில் தலையிட்டதில்லை.

ஆயுதமேந்தியது எமக்கெதிரான வன்முறைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே. இந்தப் போராட்டத்தில் பலபேர் தம்மை அர்ப்பணித்துள்ளனர். இந்த தியாகத்திற்கு நாம் அர்த்தம் கற்பிக்க வேண்டுமே தவிர அதை அலசி ஆராய வேண்டியதில்லை. இன்று ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் எமது பிரச்சினை பேசப்படுகிறதென்றால் அதற்கு காரணம் ஆயுதப் போராட்டமே. கரும்புலி தினத்தை கொண்டாட விடாமல் தடுப்பது, புலி நீக்க அரசியலை செய்வதற்காகத்தான்.

இம்முறை 7 ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும். உள்ளுக்குள் சில உரசல்கள் நடந்தாலும், இலக்கில் அனைவரும் ஒன்றாகத்தான் நிற்கிறோம். ஐ.தே.கவுக்கு இருந்த வாக்குகள் இரண்டாகப் பிரியும். சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். ஆயினும் அவர்களின் வாக்கை டக்ளஸ், வாசுதேவின் கட்சிகள் பங்கிட்டுக் கொள்ளும். விக்கினேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து சென்றவர் என்பதால் அங்குதான் சிறிய உடைவு வரும். எனினும் அது பாதகமல்ல. தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பவர் மனநிலை என்றும் மாறாது. நாங்கள் புலிநீக்க அரசியல் செய்பவர்கள் அல்ல. இம்முறை 7 ஆசனங்களையும் நாங்கள் பெறுவோம்' என முன்;னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.


No comments