ஒட்டுண்ணிகளே அகற்றப்படவேண்டும்: மரத்தையல்ல - சரவணபவன்!


பெரிய மரமொன்றில் ஒட்டுண்ணியான குருவிச்சை வந்தால் , வெட்ட வேண்டியது மரத்தை அல்ல குருவிச்சையையே என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஈ.சரவணபவன்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த வேளை கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தெளிவான அரசியல் பார்வையினை கொண்டவர்கள்.எது மரம் எது குருவிச்சையென்பது தெரியுமெனவும் ஈ.சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

ஏதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு யாழில் ஏழு ஆசனங்களையும் கைப்பற்றுமென தெரிவித்த அவர் அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஜக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.அதேவேளை ஆளும் கட்சியோ மொட்டு கட்சி,சிறீலங்கா சுதந்திரக்கட்சி,ஈபிடிபி என பல பகுதிகளாக துண்டுபட்டுள்ளது.

மறுபுறம் மக்கள் முன்னணியும் விக்கினேஸ்வரன் ஜயாவின் கூட்டணியும் கூட பிளவுபட்டுள்ளது.

கூட்டமைப்பு மட்டுமே பலமாக உள்ளதால் மக்களது பூரண ஆதரவுடன் ஏழு ஆசனங்களையும் கைப்பற்றுமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டமைப்பினுள் உள்ளக முரண்பாடு என்பது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள முரண்பாடு போன்றது எனவும் தெரிவித்தார்.

No comments