தொடருந்து நிலையத்தில் குழப்பம்! குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

வவுனியா தொடருந்து நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தொடருந்து நிலைய அதிபருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குறித்த இரு நபர்களும் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடருந்து நிலைய அதிபர் தலைமையகத்திற்கு அவிக்கப்பட்டது. அச்சுறுத்தல் விடுத்த இருவரும் கைது செய்யப்படும் வரை தொடருந்து சேவைகளை நிறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என அங்கிருந் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments