வனவள திணைக்களத்தின் அட்டுழியங்கள்! வவுனியாவில் போராட்டம்!

வனவள திணைக்களத்தின் அட்டுழியங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 90 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு  சென்றமக்கள் மீண்டும்வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளையும்,  தமது பெற்றோர்கள் வசித்த காணிகளை பிள்ளைகளும் துப்புரவாக்கி தற்காலிகமாக கொட்டில்கள் அமைத்து வசித்து வருகின்றனர்.

இம்மக்களின் வாழ்வு தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் கலந்துரையாடப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வனவள திணைக்களத்தினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற மக்கள். அனைத்து தரப்பினர் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில் தமக்கான தீர்வினை கோரி இன்றையதினம் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments