சயந்தனுக்கு அல்வா கொடுத்த சசிகலா?

நேற்றைய தினம் (21) மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட்டத்திற்கு செல்லவிருந்த உறுப்பினர்களை முதலில் கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த சயந்தன், சசிகலா ரவிராஜை சுயமாக இயங்க விடமால் தடுப்பதற்கேதுவான அணுகுமுறைகளை கையாள்வதற்கு திட்டங்களை வகுத்த பின்பு, அங்கிருந்து மாமனிதர் இல்லத்திற்கு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றனர்.

இதில் ஒரு சிலர் சயந்தனின் திட்டத்திற்கு உடன்படவில்லை. குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தென்மராட்சிப் பகுதியில் ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென்று மறைமுக அழுத்தங்கள் சயந்தனால் சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. ஆயினும் இதை லாவகமாக கையாண்ட சசிகலா கட்சி மற்றும் கட்சித் தலைமைக்கு விசுவாசமாகவும் கட்சியின் வெற்றிக்காகவும் தென்மராட்சிப் பகுதியில் தான் தனித்து பிரச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார். அத்துடன் மற்றைய தொகுதிகளில் அந்தந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவும் விருப்பம் தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

No comments