சஜித் தரப்பு மும்முரம்


சஜித் பிறேமதாசா தனது கட்சி சார்பில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்களை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார்.

யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தலைமையிலான வேட்பாளர்கள் இன்றைய சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.

ஏற்கனவே ரணிலின் ஜக்கிய தேசியக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அணியினர் சகிதம் தேர்தலில் குதித்துள்ள நிலையில் சஜித் ஆதரவு தரப்பும் முனைப்புடன் தேர்தலில் குதிக்கவுள்ளது.

தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பு நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments