இனப்படுகொலையாளியை அனைத்துலக நீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!

Félicien Kabuga
ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் இனப்படுகொலை செய்தாக கைது செய்யப்பட்டு பிரான்சில் சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஃபெலிசியன் கபுகாவை (Félicien Kabuga) ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயத்திடம் (United Nations tribunal)  விசாரணைகளுக்காக கையளிக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 100 நாட்களில் 800,000 துட்ஸிகளையும் மிதவாதப் போக்குள்ள ஹூட்டஸ்சுக்களையும் கொன்று இனப்படுகொலை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

ஃபெலிசியன் கபுகா பாரிசில் கடந்த மே மாதம் 16 நாள் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 87. அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனக் கூறியுள்ளார்.

ருவாண்டாவிலிருந்து சுவிற்சர்லாந்து, ஜைர் மற்றும் கென்யாவுக்குச் சென்றபோது அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அவரது பண பலமும் அவருக்கு இருந்த தொடர்புகளும் அவரைக் காப்பாற்றியுள்ளது.

ஹேக் மற்றும் தான்சானியாவின் அருஷாவில் உள்ள ஐ.நா தீர்ப்பாயத்தில் அவர் ஒரு நியாயமான விசாரணையைப் பெற மாட்டார் என்று அவரது சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

அவரது வயது முதிர்வு காரணமாக உடநிலை பலவீனமானது என்றும் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டால் அவருக்கு தொற்று நோய் ஏற்படும் என அவரது சட்டவாளர்கள் நீதிமன்றில் விளக்கம் கொடுத்துள்ளன. 

ஆபிரிக்காவுக்கு மாற்றப்படுவதால் அவருக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அவரது மாற்றம் பொருந்தாது என பிரான்ஸ் நீதிமன்றம் கூறியுள்ளது.

இன்று புதன்கிழமை தீர்ப்பிற்கு முன்னதாக ஐ.நா தீர்ப்பாயத்தின் தலைமை சட்டவாளர் செர்ஜ் பிராமெர்ட்சுக்கு எழுதிய கடிதத்தில், கபுகாவின் சட்டவாளர்கள் அவரை பிரான்சின் நீதித்துறையிடம் விட்டுவிடுமாறு வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments