காவல்துறையினருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டு அறிவிப்பு!

George Floyd
அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய நான்கு காவல்துறையினருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெரெக் ஷோவின் (Derek Chauvin) எதிராக இரண்டாம் நிலை கொலைச் குற்றச்சாட்டுகள் சுமந்தப்பட்டுள்ளன. ஏனைய மூவருக்கும் எதிராக கொலைக்கு உதவியதாக அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
George Floyd

ஃபிலாய்டின் மரணம் இனவெறி மற்றும் கறுப்பின அமெரிக்கர்களின் காவல்துறையினரின் கொலைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

கடந்த எட்டு நாட்களில் பெரும்பான்மையான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் சில வன்முறையாக மாறியுமிருந்தன. பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

No comments