யூன் 15 முதல் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குகிறது ஜேர்மனி!

Heiko Maas
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக ஜேர்மனி மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை இந்த மாதம் 15 நாள் முதல் அத்தடையை விலக்கிக் கொள்கின்றது என வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

ஜேர்மனியில் கொரோனா நோய்த் தொற்றுகள் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான வழிகளை அரசாங்கம் தேடுகிறது.

முதற் கட்டமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஷெங்கன் நாடுகள் மற்றும் பிரித்தானியா உட்பட 31 நாடுகளுக்கு நுழைவதற்கு நுழைவுத் தடைகளோ அல்லது தனிமைப்படுத்தலோ இருக்காது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் சொந்தப் பயணத்தடை அமுலில் இருக்குமானால் அவர்களுக்கு இப் பயண ஆலோசனை பொருந்தாது. குறிப்பாக நோர்வேயும் ஸ்பெயினும் போன்ற நாடுகள் சொந்த பயணத்தடைகள் வைத்திருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட 

மேற்குறிப்பிட்ட நாட்களில் ஒரு வாரத்தில் 100,000 பேரில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மீண்டும் பயணத்தடை அறிமுகப்படுத்தப்படும் என மாஸ் மேலும் கூறினார்.

No comments