கொரோனா விதிமுறைகளை மீறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரம் ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்புத்
தெரிவித்து லண்டனிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்வை வெளிப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளின் படி ஒரு இடத்தில் ஆறு பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது. இவ்விதியை மீறியே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் கலந்கொண்டிருந்தனர்.Black Live Matter

கடந்தவாரம் ஜார்ஜ் ஃபிலாய்டை பிடித்து வீதியில் ஒரத்தில் குப்புறபடுக்க வைத்து அவரின் கழுத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது முழங்காலால் 9 நிமிடங்கள் அழுத்தியபோது, தன்னால் மூச்சு விடமுடியாது உள்ளது என ஜார்ஜ் ஃபிலாய் கத்தினார். அவரின் அந்த வேண்டுகோளை ஏற்காக காவல்துறையினர் தொடர்ந்து அழுத்தியதால் அவர் மயக்கமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இறந்துவிட்டார். 

இது தற்பொது இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறி அமெரிக்க நகரங்கள் முழுவதும் பரவியது. சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. தற்போது அமொிக்காவைக் கடந்து பிரான்ஸ், பிரித்தானியா என போராட்டம் பரவியுள்ளது.
Black Live Matter
Black Live Matter

Black Live Matter

Black Live MatterNo comments