கடுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பிரித்தானியாவில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்துவதற்கு உலக சுகாதார அமைப்பு தனது எச்சரிக்கையை தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இயக்குனர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூக் தெரிவிக்கையில்:-

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து ஒரு வலுவான கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்கும் வரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது. பிரித்தானியாவில் தற்போது கண்காணிக்கப்படும் வெளிவரும் முடிவுகள் குறித்தது வெளிவந்த பலத்த விமர்சனங்ளை அடுத்தே உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இங்கிலாந்து மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அரசாங்கம் வணிக நிலையங்களைத் திறக்கவும், மக்களை வீட்டுக்குள் இருந்து தெருவுக்கு அழைத்து வர அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது.

2 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது குறித்து மீளாய்வை அமைச்சரவை உறுதிப்படுத்திபோதும், பெரும் வணிக தலைவர்கள், பழமை வாதக் கட்சியை பின்னுக்கு இருந்து இயக்குபவர்கள், வலதுசாரி ஊடகங்கள் போன்றவற்றால் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோய் பரவலின் தாக்கம் குறைவடைந்து வருவதால் 2 மீற்றர் சமூக இடைவெளியை தளர்த்திச் செல்ல அரசாங்கம் விரும்புகிறது.

டவுனிங் ஸ்ட்ரீட் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க பிரதமர் பொறிஸ் ஜோன்சன் திட்டமிடும்போது, தொற்று நோய்களை  கண்காணிக்க முடியும் எனபதை முதலில் நம்ப வேண்டும் என்றார்.

நேற்று சனிக்கிழமையுடன் பிரித்தானியாவில் இதுவரை 41,662 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனா தொற்று  1,425 பேருக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் 181 பேர் இறந்துள்ளனர் என்பதும் நினைவூட்டத்தக்கது.



No comments