பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு தொடர்பான அறிவித்தல்!

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 இன் எழுத்துத் தேர்வினை 
எதிர்வரும் ஒக்ரோபர் மாத முற்பகுதியில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்கள் நிறைவடைந்ததும் தேர்வு நாள், நேரம், இடம் ஆகியன அறிவிக்கப்படும்.

தற்போதைய நிலைமையில், 

புலன்மொழிவளத் தேர்வினை நடாத்துவது தொடர்பாக இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. 

எனவே, இவ்வாண்டு புலன்மொழிவளத்தேர்வு நடைபெறாது என்பதனையும் 
தேர்வுப் பெறுபேறானது, எழுத்துத்தேர்வின் புள்ளிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பதனையும் அனைவரதும் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். 

தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்ச்சோலை மாணவர்களுக்கான சுட்டெண்களும், 
தனித்தேர்வர்களுக்கான அனுமதியட்டைகளும் 
செப்ரெம்பர் மாதம் அனுப்பிவைக்கப்படும். 

எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட தடங்கல்களால் மனந்தளராது, 
எம் மாணவச்செல்வங்களை உரிய முறையில் வழிப்படுத்தி, 
தேர்விற்கு அணியஞ்செய்து உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடம் வேண்டிநிற்கிறோம். 

No comments