கொரோனா தடுப்பு மருந்து! மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை ஆரம்பித்தது ரஷ்யா!

covid-19
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ரஷ்யா அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் முடித்து, மனிதர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தும் பரிசோதனைகளை ரஷ்யா ஆரம்பித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் தாங்களாகவே முன்வந்த தடுப்பூசியை ஏற்றுவதற்கு  50 அதிகாரிகள் தயாராக உள்ளனர் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பெண் வீரர்களும் உட்பட 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.

மனிதர்கள் மீது கொரோனா தடுப்பு மருத்து செலுத்திப் பரிசோதனை நடத்துவதை எதிர்வரும் யூலை மாதம் வரை நடத்தப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments