கிழக்கை விழுங்க வரும் முதலைகள்!


கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் , இராணுவ அதிகாரி ,மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்

1. எல்லவால மேதானந்தா தேரர்

2. பனமுரே திலகவன்ஷா தேரர்: வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பிரதான மத குரு

3.மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

4.டாக்டர் சேனரத் பண்டாரா திசாநாயக்க: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்

5. செல்வி சந்திரா ஹெரத் : காணி ஆணையாளர்

6. செல்வி A.L.S.C. பெரேரா: பிரதம நில அளவையாளர்

7.பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா: சிரேஷ்ட விரிவுரையாளர், களனி பல்கலை கழகம்

8. பேராசிரியர் கபில குணவர்தன: மருத்துவ பீடம் , பேராதெனிய பல்கலை கழகம்

9. தேசபண்டு தென்னகூன் : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

10. H.E.M.W.G. திசனாநாயக்க: கிழக்கு மாகாண காணி ஆணையாளர்

11. திலித் ஜெயவீரா: பணிப்பாளர் , Derana ஊடக வலையமைப்பு

இந்த ஜனாதிபதி செயலணியில் கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாக கொண்ட துறைசார்ந்த தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் சார்ந்த நிபுணர்களை முற்றுமுழுதாக புறக்கணித்து இருக்கிறார்கள்
மறுபுறம் இனவாதம் பேசி வரும் பிக்குகள் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகளை நியமனம் செய்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகமான கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக கபளீகரம் செய்யும் திட்டத்தை ராஜபக்சே நிர்வாகம் முன்வைத்து இருக்கிறது

No comments