உழவூர்த்தியில் சிக்குண்டு பலி! உயிரிழந்தன 30 கோழிகள்!

tractor
கிளிநொச்சி - புதுமுறிப்புப் பகுதியில் உழவூர்தி ஒன்று பயணித்தவர் அதன் சில்லுக்குள் தவறி விழுந்ததில் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 8 ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உழவூர்தியில் சாரதியும், மற்றவர் ஒருவர் சில்லின் மேல் அமைந்துள்ள மண் தடுப்பான் (mudguard) மீது அமர்ந்து இருந்து பயணித்துள்ளனர். மண்தடுப்பான் மீது அமர்ந்திருந்தவர் தவறுதலாக சில்லுக்குள் வீழ்ந்ததால் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் வழித்தடம் மாறிய உழவூர்தி அருகில் இருந்த வீட்டு வேலியை உடைத்துக்கொண்டு  வளவுக்குள் நுழைந்து வளவுக்குள் இருந்த கோழிக்கூட்டில் மீது மோதியது. இதனால் கூட்டுக்குள் இருந்த 30 கோழிகளும் உயிரிழந்துள்ளன.

சம்பவத்தை அடுத்து உழவூர்தியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நேற்று இரவு புதன்கிழமை இச்சம்வம் இடம்பெற்றுள்ளது எனவும் ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments